நாளை முதல் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் குறித்த இரண்டு நாள் பயிற்சி!

தமிழகம்

தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டத் திட்டங்களையும் குறித்த இரண்டு நாட்கள் பயிற்சி நாளை (மே 12) மற்றும் நாளை மறுநாள் (மே 13) நடைபெறவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,  “இந்தியாவில் தற்போது உற்பத்தி பொருட்கள் சேவைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே உள்ளன.

எனவே ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகளைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது.

தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை, ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டத் திட்டங்களையும் குறித்த இணையவழி கருத்தரங்கம் (2 நாட்கள்) பயிற்சியினை வரும் 12.05.2023 தேதி முதல் 13.05.2023-ம் தேதி வரை (காலை 10.30 முதல் மதியம் 2 மணி வரை) வழங்க உள்ளது.

இந்தப் பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்கான வாய்ப்புகள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டத்திட்டங்கள், வங்கி நடைமுறைகள்,

அந்நிய செலாவணியின் மாற்று விகிதங்கள், காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், போன்றவை பயிற்றுவிக்கப்படும்.

மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவற்றைப் பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.

ஏற்றுமதி சார்ந்த தொழில் தொடங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். 

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை,

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032 என்ற முகவரியிலும்,

044-22252081/22252082, 9677152265, 8668102600 என்ற தொலைபேசி மற்றும் கைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இந்தப் பயிற்சிக்கு முன்பதிவு அவசியம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சி அரியணையில் அமரப்போவது யார்?: கர்நாடக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்!

“உதயச்சந்திரன் ஐஏஎஸ் மிரட்டல்” : ஜவகர்நேசன் விலகல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *