எண்ணூர் தனசேகரன் தற்கொலை மிரட்டல்: பின்னணி இதுதான்!

தமிழகம்

ரவுடி எண்ணூர் தனசேகரன் இன்று மீண்டும் தற்கொலை மிரட்டலில் ஈடுபட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் மீது கொலை, கொள்ளை முயற்சி வழக்குகள் உள்ளன. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், சிறை விதிகளை மீறியதால், கடந்த ஆண்டு கடலூர் மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டார்.

சிறையில் இருந்து அவரிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஜெயிலில் இருந்தவாறே தனது ஆட்களை வைத்து கடந்த ஆண்டு ஜெயிலர் மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த பிப்ரவரி மாதம் கடலூர் சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றக்கோரி எண்ணூர் தனசேகரன் தற்கொலை முயற்சி செய்தார். இந்தநிலையில் இன்று மீண்டும் தற்கொலை மிரட்டலில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி தனசேகரன் மீதுள்ள வழக்கு தொடர்பாக சென்னை பொன்னேரி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் அன்று மாலை கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது தனசேகரன் அறையை சிறைக்காவலர்கள் சோதனை செய்தனர். அவரது அறையில் செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து சிறைத்துறையினர் செல்போனை பறிமுதல் செய்தனர். இந்தநிலையில் இன்று தனசேகரன் தற்கொலை மிரட்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து சிறைத்துறை தரப்பில் விசாரித்தபோது, “எண்ணூர் தனசேகரனுக்கு ஏற்கனவே பிபி உள்ளதால் அவர் அதற்கான மாத்திரைகளை எடுத்து வருகிறார். அவரது அறையில் பயன்படுத்தி வந்த செல்போனை சிறைத்துறையினர் கைப்பற்றியதால் கோபத்தில் இருந்துள்ளார். இதனால் இன்று காலை 9 மணியளவில் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மாத்திரையை விட ஒரிரு மாத்திரை அதிகமாக எடுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டல் விடுத்தார்.

உடனடியாக அங்கிருந்த சிறைக்காவலர்கள் மேலதிகாரிகளிடம் தெரிவித்து அவசரமாக அவரை சிறைக்குள் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் தனசேகரன் நார்மலாக இருப்பதாக கூறி  மீண்டும் அவரை சிறைக்கு அனுப்பி வைத்தார்” என்று தெரிவித்தனர்.

வணங்காமுடி

மகளிர் உரிமை தொகை: ரூ.1000 வரவு வைக்கும் பணி துவக்கம்!

தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *