இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு மே 5-ஆம் தேதி முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை நடைபெற்றது. 1, 87,847 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்துடன் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இதில் 1,78,959 மாணவர்கள் கலந்தாய்வில் பங்குபெற தகுதி பெற்றனர்.
மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூன் 26-ஆம் தேதி வெளியிடப்பட்டது. www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று சிறப்பு பிரிவினரான 7.5 சதவிகித அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இன்று காலை 10 மணிக்கு கலந்தாய்வு துவங்குகிறது. சிறப்பு பிரிவினரை தொடர்ந்து இதர சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 24 முதல் 27-ஆம் தேதி வரையும் பொதுப்பிரிவினருக்கு ஜூலை 28-ஆம் தேதியும் கலந்தாய்வு துவங்குகிறது.
இணைய வழியில் கலந்தாய்வு நடைபெற உள்ளதால் மாணவர்கள் தங்களது வீடு மற்றும் மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் மூலமாக இந்த கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
செல்வம்
உலக முதலீட்டாளர்கள் மாநாடு: சிறப்பு அதிகாரியாக அருண் ராய் ஐஏஎஸ்