இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று (செப்டம்பர் 10 ) காலை 10 மணிக்கு தொடங்கியது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 1,48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கியது.
இதையடுத்து ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு, சில காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை செப்டம்பர் 7 -ம் தேதி வெளியிட்ட நிலையில் அடுத்து பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை 4 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. 1.58 லட்சம் மாணவர்கள் இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்