இந்த மாத இறுதியில்தான் என்ஜினீயரிங் கவுன்சிலிங்!

தமிழகம்

என்ஜினீயரிங் கவுன்சிலிங் நேற்று (ஜூலை 2) தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த மாத இறுதியில்தான் தொடங்கும் என்று தெரிகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 460 கல்லூரிகளில் 2023-24ஆம் கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் இளங்கலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்க 1.78 லட்சம் மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் என்ஜினீயரிங் கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில் திருச்செந்தூரைச் சேர்ந்த மாணவி நேத்ரா முதலிடத்தை பிடித்தார். 102 பேர் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றனர். இதில் 100 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் ஆவர். 

என்ஜினீயரிங் கவுன்சிலிங் நேற்று (ஜூலை 2) தொடங்கும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கலந்தாய்வு தள்ளிப் போவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்தார். மருத்துவ கலந்தாய்வுக்கான முதல் கட்ட கவுன்சிலிங் தொடங்கிய பின்னர் என்ஜினீயரிங் கவுன்சிலிங் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

மருத்துவ சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் என்ஜினீயரிங் கவுன்சிலிங் இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் (ஆகஸ்ட்) முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ கவுன்சிலிங் இந்த மாதம் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்று தெரிகிறது. 

இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள அதிகாரி ஒருவர், “மருத்துவ கவுன்சிலிங்கிற்கு பிறகே என்ஜினீயரிங் கவுன்சிலிங் நடத்தப்படும். கவுன்சிலிங் தாமதத்தால் முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஆகும். கவுன்சிலிங் நான்கு சுற்றுகளாக குறைந்தது இரண்டு மாதங்கள் நடைபெறும். ஆகஸ்ட் மாதத்தில் கவுன்சிலிங் தொடங்கினால், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வகுப்புகள் தொடங்கும்” என்றார்.

நாகராஜ்

இந்தியா-இலங்கை படகு போக்குவரத்தில் சிக்கல்!

உக்ரைன் நடத்தும் எதிர்த்தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *