சென்னையில்பல்வேறு முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சமீபகாலமாக நாடு முழுவதும் அமலாக்கத்துறையினர் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக பாஜக ஆளாத மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை முதல் சென்னையில் 47 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுப்பட்டு வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பல்வேறு முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகின்றது. எனினும் சோதனை நடைபெற்று வரும் முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.
அமலாக்கத்துறையை பாஜக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து செயல்படுத்தி வருவதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது அமலாக்கத்துறை நடத்தி வரும் அதிரடி சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
டிஜிட்டல் திண்ணை: கைது வளையத்தில் இரு தமிழக அமைச்சர்கள்: அமித் ஷாவின் அமலாக்க அஜெண்டா!