சென்னையில் வேப்பேரி, தேனாம்பேட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (மார்ச் 9) காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் மணல் குவாரிகள், கட்டுமான நிறுவனங்கள், திமுகவின் முக்கிய புள்ளிகள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வந்தனர்.
அந்தவகையில், கடந்த வாரம் சென்னையில் கட்டுமான நிறுவனங்கள், ரசாயன நிறுவன அதிபர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இந்தநிலையில், சென்னை ஆர்.ஏ.புரத்தில் வசித்து வரும் கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் வீட்டிலும், அதேபோல வேப்பேரி, பாரிமுனை, மயிலாப்பூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கட்டுமான நிறுவன தொழிலதிபர்கள் வீடுகளிலும் அமலாக்கத்துறை இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது.
தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் அடுத்தடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மஹாசிவராத்திரி – மகத்துவம் என்ன?
சென்னையில் இன்று எங்கெங்கு போக்குவரத்து மாற்றம்?