ஜாபர் சாதிக்கை கைது செய்த அமலாக்கத்துறை சென்னை டீம்!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஜூன் 28) கைது செய்தனர்.

ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி அமைப்பாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து அவர் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கை என்சிபி அதிகாரிகள் கடந்த மார்ச் 9-ஆம் தேதி கைது செய்தனர். தற்போது அவர் டெல்லி திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.

போதைப்பொருள் வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் அருளானந்தம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக் வீடு மற்றும் அவரது தொழில் கூட்டாளிகள் வீடு மற்றும் அலுவலகங்கள், தியாகராய நகரில் உள்ள இயக்குனர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்தநிலையில், சென்னையில் இருந்து டெல்லி திஹார் சிறைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவரை சென்னைக்கு அழைத்து வந்து கஸ்டடியில் எடுத்து விசாரிக்க இருப்பதாகவும், இதற்காக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சிதிலமடைந்த குடியிருப்புகள் சீரமைக்கப்படும்: பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு!

எடப்பாடி, சீமானுக்கு உதவுவாரா விஜய்?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts