சென்னையில் ONE என்ற பெயரிலான ஐ.டி நிறுவனம் உள்ளிட்ட 13 இடங்களில் இன்று (ஆகஸ்ட் 10) காலைமுதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
தனியார் ஏற்றுமதி நிறுவனம் ரூ.225 கோடி நிதி மோசடி செய்ததாக சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையினரின் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
மேற்கு தாம்பரம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கோடம்பாக்கம் , துரைப்பாக்கம், பெருங்குடி உள்பட 13 இடங்களில் ஜேம்ஸ் வால்ட்டர் என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை காலை முதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பிலும் டேனியல் என்பவருக்கு சொந்தமான வீட்டில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஜெயிலர்: சிறை கைதிகள் வேடத்தில் திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள்!
பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!