கூகுளின் இணை நிறுவனரும், கோடீஸ்வரருமான செர்ஜி பிரின் மனைவியுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலையடுத்து, எலான் மஸ்க் அது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார்.
உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் , உலக அளவில் எந்த அளவுக்கு அறியப்பட்டுள்ளாரோ அதே அளவுக்கு சர்ச்சையிலும் சிக்கி வருகிறார்.
கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் செர்ஜி பிரின் உலகின் 6 வது பணக்காரர். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்தே தன்னுடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார் . ஜனவரி மாதம் நிகோலுடன் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் , இவர் மனைவி நிகோலுடன் எலான் மஸ்கிற்கு தொடர்பு இருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டிருப்பது தான் தற்போது உலகம் முழுவதும் இணையவாசிகளின் பேசு பொருளாகி உள்ளது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள செய்தியில் , 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே எலான் மஸ்கிற்கும் , நிகோலுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. மியாமி நகரில் ஆர்ட் பேஸல் என்ற நிகழ்ச்சி நடந்தது. உலகம் முழுவதிலும் இருந்து பிரபல கோடீஸ்வரர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் நிகோலிடம் மஸ்க் எல்லை மீறி நடந்து கொண்டார். இது செர்ஜி பிரினுக்கு தெரியவந்த நிலையில் பிரினிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு தப்பித்தார் மஸ்க் என்று கூறியுள்ளது.
இந்த நிலையில், எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தகைய தகவலை முற்றிலும் மறுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ,
அந்த பதிவில் எலான் மஸ்க் , “தற்போது வெளியாகும் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் தவறானது . நானும் செர்ஜியும் நல்ல நண்பர்கள். நேற்று இரவு கூட ஒரு பார்ட்டியில் ஒன்றாக கலந்து கொண்டோம். நிக்கோலை மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே சந்தித்திருக்கிறேன். இந்த சந்திப்பின் போது எங்களை சுற்றி பலரும் இருந்தனர். ரொமாண்டிக்காக எதுவும் அங்கு நடக்கவில்லை” என்று பதிவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
உள்ளூரில் இருந்து உலகம் வரைக்கும் இந்த மேட்டர்தான் பேசப்படுது.
மு.வா.ஜெகதீஸ் குமார்-