மின் பாதுகாப்பு: தென்மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Monisha

electricity safe for south TN peoples

கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு மின்சார பாதுகாப்பு வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. electricity safe for south TN peoples

கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தென்மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பி வரும் சூழலில் மின்சார பாதுகாப்பு தேவை என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு இன்று (டிசம்பர் 27) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கன மழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட மின்சார பாதிப்பினை. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் போர்க்கால அடிப்படையில், பணிகளை துரிதமாக மேற்கொண்டு தற்போது அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக மின் வயர்கள் மற்றும் மின் சாதனங்கள் பழுது ஏற்பட்டிருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளபடியால், பொதுமக்கள் கீழ்கண்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1. வீட்டில் மின் சுவிட்சுகளை ‘ஆன்’ செய்யும் போது பாதுகாப்புக்காக காலில் செருப்பு அணிந்து கொள்ளவும்.

2. நீரில் நனைந்த பேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம்.

3. வீட்டின் உட்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது.

4. மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்கக்கூடாது.

5. வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் அருகில் இருந்து தாங்களாகவே ஓயர் மூலம் மின்சாரம் எடுத்துவரக்கூடாது.

6. மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ. மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ உடனடியாக மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987 என்ற அலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

இந்தியளவில் அதிக விற்பனை: உங்க பேவரைட் பைக் லிஸ்ட்ஸ் இருக்கா?

எண்ணூர் வாயு கசிவு… தொழில்நுட்ப குழு அமைப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரியம்!

electricity safe for south TN peoples

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share