மின் கட்டணத்தில் மத்திய அரசு செய்துள்ள மாற்றத்தால் வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கூறியுள்ளது.
Time of Day Tariff (டிஓடி) எனப்படும் தினசரி நேரத்தின் அடிப்படையிலான மின்கட்டண விலை மாற்ற முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, அதிக மின்பயன்பாடு இருக்கும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மாலை 6 முதல் 10 மணி வரை போன்ற நேரத்தில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க இந்த முறை வழிவகை செய்யும்.
வணிக மற்றும் தொழில்துறை வாடிக்கையாளர்களுக்கு முதலில் இந்த கொள்கை ஏப்ரல் 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் மற்ற பயனர்களுக்கு, இது ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் மத்திய அரசு கூறியிருந்தது.
ஏற்கனவே ஸ்மார்ட் மீட்டர் வைத்திருக்கும் நபர்களுக்கு, இந்த மீட்டர்கள் நிறுவப்பட்டவுடன் புதிய கட்டணம் நடைமுறைக்கு வரும்.

இந்நிலையில், மின் கட்டணத்தில் மத்திய அரசு செய்துள்ள மாற்றத்தால் வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது தொடர்பாக தண்டத்தொகை ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை. மின் கட்டண ஆணைப்படி உச்ச நேர கால அளவு கட்டணம் வீட்டு நுகர்வோர்களுக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இன்று (ஜூன் 24) விளக்கம் அளித்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்