வடசென்னையில் இன்று (ஆகஸ்ட் 17) பழுது மற்றும் பராமரிப்பு பணி காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் இன்று 420 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 1ஆவது நிலையின் 1ஆவது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிக்காக 210 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
1-வது நிலையின் 3-வது அலகில் கொதிகலன் குழாயில் கசிவு காரணமாக 210 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் முடிவு பெற்ற பிறகு மீண்டும் மின் உற்பத்தி வழக்கம் போல் தொடரும் என மின்சாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள 1 மற்றும் 2-வது நிலையில் உள்ள 5 அலகுகளில் ஒரு நாளுக்கு 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. அதில் இன்று 420 மெகா வாட் உற்பத்தி தடைபட்டுள்ளது.
மோனிஷா
தூத்துக்குடியில் நிலக்கரி தட்டுப்பாடு: மின் உற்பத்தி நிறுத்தம்!