கனமழை : சீரான மின்சாரம் வழங்க ரூ.4.4 கோடி!

Published On:

| By Kavi

electricity department has earmarked Rs 4.4 crore

கனமழை காரணமாக ஏற்படும் மின் விநியோக பாதிப்புகளை சரி செய்ய ரூ.4.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். electricity department has earmarked Rs 4.4 crore

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. தற்போது வரை பெய்த மழைக்கே பல இடங்களிலும் தண்ணீர் தேங்கியிருக்கிறது.

எனவே மழை காலங்களில் ஏற்படும் மின் தடை, மின் விபத்து, தடையின்றி மின்சாரம் வழங்குவது ஆகியவை தொடர்பாக நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (நவம்பர் 15) ஆய்வு மேற்கொண்டார்.

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் காணொளி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களின் தலைமைப் பொறியாளர்களுடனும் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடனும்,

பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் விநியோகம் வழங்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

கனமழை பெய்து வரும் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் மின் கட்டமைப்பில் ஏற்படும் சேதாரங்களை பொறுத்து,

சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளர்கள், தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் தளவாடப் பொருட்களுடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.

electricity department has earmarked Rs 4.4 crore

மேலும், “வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மின்சார வாரியம் சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து,

கடந்த 04.11.2023 அன்று நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அனைத்தினையும் முழுமையாக பின்பற்ற வேண்டும்.

வடகிழக்கு பருவமழையின் காரணமாக இதுவரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த 169 மின் கம்பங்கள் மற்றும் 72 மின் மாற்றிகள் உள்ளிட்ட அனைத்து சேதங்களும் துரித முறையில் சரி செய்யப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

மிக கனமழை காரணமாக ஏற்படும் மின் சேதாரங்களை போர்கால அடிப்படையில் துரிதமாக சரி செய்வதற்காகவும், சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு,

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 44 மின்பகிர்மான வட்டங்களுக்கும் வட்டத்திற்கு 10 லட்சம் வீதம் மொத்தமாக 4.4 கோடி நிதி உடனடியாக வழங்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

பொதுமக்கள் மின்தடை சம்பந்தமான புகார்களை 24X7 மணி நேரமும் செயல்படும் மின் நுகர்வோர் மின் சேவை மையமான மின்னகத்தின் 94987 94987 என்ற அலைபேசி எண்ணின் வாயிலாகவும், electricity department has earmarked Rs 4.4 crore

மற்றும் அனைத்து மின்பகிர்மான வட்ட மின்தடை நீக்கம் மையம் வழியாகவும் தெரிவிக்கலாம் என்றும் மின் துறை அறிவுறுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

IND vs NZ: கிறிஸ் கெய்லின் சாதனைகளை முறியடித்த ரோகித் சர்மா

பயிர் காப்பீடு: கடைசி தேதி நீட்டிக்கப்படுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share