வீடு மற்றும் பொது மின் இணைப்பு பெயர் மாற்றம் சிறப்பு முகாம் செப்டம்பர் 25 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புதாரர்களுக்கென ‘சிறப்பு பெயர் மாற்றம் முகாம்’ கடந்த ஜூலை 24 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஒரு மாதகாலம் வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்றுடன் மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான சிறப்பு முகாம் முடிவடைய உள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மேலும் ஒரு மாத காலத்திற்கு சிறப்பு முகாம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 25 ஆம் தேதி வரை சிறப்பு முகாம் செயல்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக் கிழமை, பண்டிகை தினங்களை தவிர்த்து அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைச் செலுத்தி பெயர்மாற்றம் செய்துகொள்ளும் வசதியும் நடைமுறையில் உள்ளது.
மோனிஷா
World Championship: ஒரே வீச்சில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நீரஜ்
பெண்களை குறிவைத்து பேசுவதா?: ஹெச்.ராஜாவிற்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!