electricity connection change special camp

மின்சார இணைப்பு பெயர் மாற்றம்: சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் என்ன?

தமிழகம்

வீடுகளில் மின்சார இணைப்பு பெயர் மாற்றம் செய்ய இன்று (ஜூலை 24) முதல் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் பெயர் மாற்றம் செய்ய சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் தொடர்பான விவரங்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

முன்னோர் இறப்பின் காரணமாக பெயர் மாற்றம் செய்ய சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

ஆதார் அட்டை அல்லது நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் அல்லது உரிமை ஆவணத்தின் நகல்.

நகராட்சி, மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு உரிமை ஆவணத்தின் நகல்.

செட்டிமென்ட் பத்திரம் அல்லது பகிர்வு பத்திரம் சமர்ப்பிக்கப்படாவிட்டால் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ்படி அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் பெயர்களிலும் பெயர் மாற்றம் செய்யப்படும்.

குழு வீடுகளில் பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

நலவாழ்வு சங்கத்தின் பேரில் பதிவு சான்றிதழ், அல்லது வளாகம், அப்பார்ட்மெண்ட் பெயருக்கு மாற்ற விண்ணப்பத்தில் கையொப்பமிட்ட குடியிருப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதம்.

பில்டர்கள், டெவலப்பர்கள் பெயரில் இருக்கும் குடியிருப்புகள் அல்லது குடியிருப்பு வளாகங்கள் குரூப் ஹவுஸிங்கில் உள்ள பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய:

ஆதார் அட்டை, நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் அல்லது விற்பனை பத்திரத்தின் நகல் அல்லது ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம், பரிசு பத்திரம், செட்டில்மென்ட் பத்திரம் போன்றவை அல்லது நீதிமன்ற உத்தரவு.

நகராட்சி மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு உரிமை ஆவணத்தின் நகல் அல்லது ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம், பரிசு பத்திரம், செட்டிமென்ட் பத்திரம்.

செல்வம்

‘எக்ஸ்’ ஆக மாறும் ட்விட்டர்: எலான் மஸ்க் அதிரடி!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்ப பதிவு முகாம் துவக்கம்!

+1
7
+1
7
+1
9
+1
25
+1
12
+1
20
+1
13

15 thoughts on “மின்சார இணைப்பு பெயர் மாற்றம்: சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் என்ன?

  1. அனைத்து ஆவணங்களையும் முகாமில் சமர்ப்பித்தும் on-line மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்

    1. Only after submission of necessary documents the charges for name transfer through online is accepted.. after making the online payment the application is rejected unless you approach the local power distribution office. This is the state of administration in Tamilnadu. Neither reason for rejection is intimated nor the application fee is refunded back

  2. I am Salman from melvisharam new house construction total cash collect with extra
    But connection worng person name no any proper response kindly advise.
    8668167762

  3. எல்லா ஆவணமும் கொடுத்ததும் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் எதிர் பாத்து மறுக்கிறார்கள், நான் என்ன செய்ய வேண்டும்

    1. சரியான கேள்வி ஒரு பயலும் பதில் சொல்ல மாட்டானே

    2. சரியான கேள்வி ஒரு பயலும் பதில் சொல்ல மாட்டானே

    3. தங்களால் முடிந்தால் லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக திரவம் தடவப்பட்ட ரூபாய்களை கொடுத்து கைது செய்யுங்கள்…

  4. In case of TNHB house purchaser’s full name not mentioned half name mentioned in EB records which happened in clerical error. This may be rectified.

  5. Today we visited…. But they are doing only for approved plots…. They are not doing for unapproved homes… But those line also purchased from TNEB only.

  6. தாத்தா பாட்டி இறந்து விட்டார்கள் ஆனால் தாத்தா death சர்டிபிகேட் இருக்கு பாட்டி யது .இல்லை new eb எடுக்கணும் ..அவர்கள் இறந்து. 23 ஆண்டுகள் ஆனது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *