தமிழகத்தில் மின்கட்டணம் உயருகிறது: அமைச்சர் செந்தில் பாலாஜி

Published On:

| By Prakash

தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

இன்று (ஜூலை 18) சென்னையில் பேட்டியளித்த அவர், பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் மின்சார கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. வீட்டு இணைப்புக்கான 100 யூனிட் மின் விநியோகத்தில் மாற்றம் இல்லை. 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு 28 முறை மின்கட்டணத்தை மாற்றியமைக்கும்படி கேட்டுக்கொண்டது. மின்சார கட்டணத்தை உயரத்தாவிட்டால் ஒன்றிய அரசு மானியம் குறைக்கப்படும் என்ற கட்டாயத்தால்தான் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel