சென்னையில் கனமழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக மாநகர போக்குவரத்து மற்றும் மின்சார ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதனால் அலுவலகம் செல்வோர் சிரமத்திற்கு ஆளாகினர். விலை அதிகமாகக் கொடுத்து ஆட்டோக்களில் போகும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் புறநகர் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே இன்று (டிசம்பர் 5) கூறியுள்ளது.
“சென்னை எழும்பூர் – தாம்பரம் – செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் 30 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். பெரம்பூர் வழியே சென்னை கடற்கரை, திருவள்ளூர்-அரக்கோணம் இடையே இயக்கப்படும் ரயில்களும் 30 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
திருவொற்றியூர் முதல் கும்மிடிப்பூண்டி இடையே ஒரு மணி நேர இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.
வேளச்சேரி முதல் சிந்தாதிரிப்பேட்டை வழியே இயக்கப்படும் ரயில்களும் அரை மணி நேர இடைவெளியில் செயல்படும்.
இன்று பிற்பகல் முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதே நேர இடைவெளியில் நாளையும் மின்சார ரயில்கள் இயக்கப்படும்” என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்கள்… யூடியுபர் மீது பாய்ந்தது சைபர்கிரைம் வழக்கு!