சென்னை ஆவடியில் பணிமனையில் இருந்து வந்த மின்சார ரயிலின் 4 பெட்டிகள் அடுத்தடுத்து தடம்புரண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி வந்த மின்சார ரயில் வந்தபோது 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.
மெரினா கடற்கரை நோக்கி செல்லவேண்டிய ரயில் தடம் புரண்டதால், அந்த வழியாக அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லக்கூடிய வந்தே பாரத், எக்ஸ்பிஸ் மற்றும் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சிக்னல் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது என்றும், ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்திற்கு ரயில் ஓட்டுநரின் அலட்சியம் காரணமா என்ற ரீதியிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை மீட்கும் முயற்சியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஜப்பான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!
அக்.25 வரை சிறப்புப் பேருந்துகள் இயங்கும்!