பராமரிப்பு பணி காரணமாக இன்று (பிப்ரவரி 18) 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Electric train cancellation in Chennai
சென்னை எழும்பூர் – விழுப்புரம் ரெயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி இன்று காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரை நடைபெற உள்ளது.
இதற்காக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருமால்பூர் இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
மின்சார புறநகர் ரயில்கள் ரத்து எதிரொலியாக பயணிகள் வசதிக்காக தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்தி குறிப்பில்,
“கோடம்பாக்கம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்கள் இடையே தெற்கு ரயில்வே சார்பில் ஞாயிற்றுக்கிழமை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
அந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக காலை 10 முதல் பிற்பகல் 3.15 மணி வரை தாம்பரம், கிண்டி, தியாகராய நகர், சென்ட்ரல், கடற்கரைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும்.
முக்கிய பேருந்து நிலையங்களில் பேருந்துகள் இயக்கத்தைக் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பயணிகளின் வசதிக்காக இன்று மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
44 மின்சார ரயில் சேவை ரத்து காரணமாக இன்று நீலம் மற்றும் பச்சை வழித்தடங்களில் வழக்கமாக மதியம் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையில் இயக்கப்படும் ரெயில் சேவைக்குப் பதிலாக காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு முறை ரெயில்கள் இயக்கப்படும்.
மேலும், காலை 05:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மாலை 08:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையிலும், வழக்கமான ஞாயிறு அட்டவணையின்படி ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நடிகர் விஜய் கட்சி பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றம்!
மோடிக்கு ஷாக் தந்த சர்வே… தமிழக வருகை தள்ளிப் போவது ஏன்?
Electric train cancellation in Chennai
இன்று மதியம் 75 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து தியாகராய நகரில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலைய மார்க்கத்தில் இயக்கப்பட்டது.
ரயில் சேவை தடை படும் சமயங்களில் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் பேருந்து சேவை சற்றும் முறை படுத்த படவில்லை . போக்குவரத்து துறை அதிகாரிகள் தூங்குகின்றனர் போல் தெரிகின்றது. நீங்கள் வெறும் செய்தியை நேரில் கண்டது போல் பதிவிடுகின்ட்றீர்கள். இன்று நான் நேரில் அவதியுற்றேன். அதிகாரிகள் இப்பொழுதெல்லாம் வெறும் வாய் வழி மட்டும் எல்லாம் நடந்தது போல் சித்தரிக்கின்றனர். எதற்காக ஊதியம் வாங்குகின்றனர் என்றே தெரியவில்லை.