கூடலூரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று (ஏப்ரல் 15) சோதனை மேற்கொண்டனர்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரின் வாகனங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் பரப்புரைக்காக நேற்று நீலகிரி சென்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், மைசூரில் இருந்து தமிழக எல்லையில் உள்ள நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தாளூருக்கு ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் வருகை தந்தார். தாளூரில் கல்லூரி மாணவர்கள், தேயிலை தொழிலாளர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி, தொடர்ந்து அங்குள்ள தேவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
இந்நிலையில், ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சோதனையில் பணம், பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. கல்லூரி மாணவர்களுடன் உரையாடிய பின்பு, ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு செல்கிறார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Gold Rate: சவரனுக்கு ரூ.520 அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
மின்னம்பலம் மெகா சர்வே: காஞ்சிபுரம்… கள நாயகன் யார்?