தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரி மீது நான்கு பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல் நிலையத்தில் இன்று (நவம்பர் 5) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 3-ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, “300 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜாக்களின் அந்தப்புரத்து மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள். அவர்கள் இன்றைக்கு தங்களை தமிழர்கள் என்கிறார்கள். எப்போதோ இங்கு வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்? ” என்று பேசியிருந்தார்.
கஸ்தூரியின் பேச்சுக்கு திமுக, பாஜக என பல தரப்பிலும் இருந்து கண்டனங்கள் குவிந்தது. இதனையடுத்து தெலுங்கர்கள் குறித்த தனது பேச்சுக்கு கஸ்தூரி மன்னிப்பு கேட்டார்.
இதற்கிடையில், கஸ்தூரிக்கு எதிராக சென்னை, திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட பல பகுதிகளில் காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
சென்னை எழும்பூர் காவல் நிலைத்தில் கஸ்தூரி மீது இந்திய தெலுங்கு சம்மேளனம் அளித்த புகாரின் அடிப்படையில் இரு பிரிவினர் இடையே கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கூடுதல் அட்வகேட் ஜெனரலாக காங்கிரஸ் வழக்கறிஞர் சந்திரமோகன் நியமனம்!
அமெரிக்க அதிபர் தேர்தல்… வாக்குப்பதிவு விறுவிறுப்பு!