உலகமே கொண்டாடும் புத்தாண்டு 2023 பிறக்கப் போகிறது. புத்தாண்டு கொண்டாட்டம் என்றால் குக்கீஸ் இல்லாமலா? இதோ… சுவையான புத்தாண்டு ஸ்பெஷல் எக்லெஸ் டூட்டி ஃப்ரூட்டி குக்கீஸ்.
என்ன தேவை?
மைதா மாவு – 50 கிராம்
சர்க்கரை – 30 கிராம்
கஸ்ட்டர்ட் பவுடர் – 10 கிராம்
பேக்கிங் பவுடர் – ஒரு சிட்டிகை
பால் – 3 டீஸ்பூன்
உருக்கிய வெண்ணெய் – 2 டீஸ்பூன்
டூட்டி ஃப்ரூட்டி – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
பேக்கிங் அவனை 175 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்களுக்கு ப்ரீஹீட் செய்யவும். மைதா மாவு, சர்க்கரை, கஸ்ட்டர்ட் பவுடர், பால், உப்பு, பேக்கிங் பவுடர், டூட்டி ஃப்ரூட்டி, உருக்கிய வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும்.
பிறகு, மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, வடை போன்று தட்டவும். பேக்கிங் டிரேயில் பட்டர் பேப்பர் விரித்து, தட்டியவற்றை வைக்கவும். இதனை பேக்கிங் ‘அவன்’ நடுவில் வைத்து 20 நிமிடங்கள் (அ) ஓரங்கள் பிரவுன் ஆகும்வரை பேக் செய்யவும். பின்னர் அவனில் இருந்து எடுத்து, ஆறியதும் காற்றுப்புகாத டப்பாக்களில் சேமித்து வைத்துச் சுவைக்கவும்.
குறிப்பு: பேக் செய்ததும் குக்கீஸ் மிருதுவாக இருக்கும். குளிரக் குளிர கடினமாகிவிடும். ஒருவேளை அதற்குப் பிறகும் மிருதுவாக இருந்தால், மீண்டும் சில நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.