அவசர தேவைக்கு உதவும் உணவு பொருட்களில் பாஸ்தாவும் ஒன்று. அப்படிப்பட்ட பாஸ்தாவில் செய்யும் இந்த முட்டை மசாலா சீஸ் பாஸ்தா, குழந்தைகள் முதல் அனைவருக்கும் ஏற்ற கால்சியம், புரோட்டீன் சத்து நிறைந்த உணவாகவும், சில நொடிகளில் சமைக்கும் உணவாகவும் அமையும்.
என்ன தேவை?
ஸ்பைரல் பாஸ்தா – 150 கிராம்
எண்ணெய் – தேவையான அளவு
வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 3
தக்காளி – 2
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 4 பற்கள்
கடலைப்பருப்பு – 300 கிராம்
கறிவேப்பிலை – தேவையான அளவு
சீரகம் – ஒரு டீஸ்பூன்
முட்டை – 2
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
குழம்பு மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
கொத்தமல்லி – சிறிதளவு
சீஸ், உப்பு – தேவையான அளவு.
எப்படி செய்வது?
200 கிராம் ஸ்பைரல் பாஸ்தாவை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் முட்டைகளை உடைத்து ஊற்றி சேர்த்துக்கொள்ளவும். மிக்ஸியில் தக்காளி, இஞ்சி, பூண்டு பற்கள் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதை முட்டையுடன் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் குழம்பு மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். கலவை நன்கு வெந்தவுடன் வேகவைத்த ஸ்பைரல் பாஸ்தாவை இதனுடன் சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்கவும். இறுதியில் தேவையான அளவு சீஸை துருவி, மேலே தூவிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : பாலக் பாஸ்தா!
கிச்சன் கீர்த்தனா: பனீர் மக்கானி பாஸ்தா