புரதம் நிறைந்த இந்த முட்டை அடையில் உள்ள லூடின் (Lutein) குழந்தைகளுக்கு ஏற்படும் கண் நோய்களிலிருந்து காக்கும். இதிலுள்ள வைட்டமின் சத்துகள், குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்புக்கு உதவும். அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கியமான அடை இது.
என்ன தேவை?
அரிசி – 100 கிராம்
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு – தலா 50 கிராம்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
பூண்டு – 2 பல்
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
முட்டை – 2
காய்ந்த மிளகாய் – 2
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அரிசி, பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் ஊறவைத்துக் களையவும். இதனுடன் சோம்பு, பூண்டு, மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் தண்ணீர்விட்டு கெட்டியாக அரைக்கவும். பிறகு, அரைத்த கலவையுடன் வெங்காயம், முட்டை சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லைக் காயவிட்டு மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டுத் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுத்தால், முட்டை அடை ரெடி.
கிச்சன் கீர்த்தனா: முளைப்பயிறு சப்பாத்தி!
கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு கார அடை