கலெக்டர்களுக்கு ED சம்மன்: தடை விதித்த உயர் நீதிமன்றம்

Published On:

| By Aara

ED summons to collectors

மணல் குவாரி விவகாரத்தில் 5 மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்திருக்கிறது. ED summons to collectors

தமிழ்நாட்டில் அரசு நடத்தும் மணல் குவாரிகளில் சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக செப்டம்பர் மாதம் ரெய்டு நடத்தியது அமலாக்கத் துறை. அதன் அடுத்த கட்டமாக நீர்வளத்துறை அதிகாரிகளிடம் சில விவரங்களை கேட்டுப் பெற்றது.

இதன் அதிரடி தொடர்ச்சியாக நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையாவுக்கு சம்மன் அனுப்பி அவரை அமலாக்கத் துறை சென்னை அலுவலகத்துக்கு வர வைத்து இரு நாட்கள் விசாரித்தது.

இதேபோல, இந்த விவகாரத்தில் திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை.

கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 28) சம்மன்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது… அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்,

“மணல் விவகாரத்தில் நம்பத் தகுந்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. தொடர் விசாரணை நடத்தினால் மட்டுமே அனைத்து ஆவணங்களையும் திரட்ட முடியும்” என்று வாதிட்டார்.

ஆனால் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகி, “மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் தான் ஆட்சியர்கள் வருகிறார்கள் என்பதால் மாநில அரசு மனுத் தாக்கல் செய்வதில் தவறில்லை.

கனிம வள சட்டம் அமலாக்கத்துறையின் கீழ் வராது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு சம்மன் அனுப்ப அதிகாரம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மணல் மோசடிகளை தடுப்பதற்கான அதிகாரிகளிடம் விசாரணைக்கு உதவ அமலாக்கத்துறை கோரிக்கை விடுக்கலாமே தவிர சம்மன் அனுப்ப முடியாது. அமலாக்கத்துறையின் இந்த செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது” என்று வாதிட்டார்.

இந்த சூழலில் இன்று (நவம்பர் 28) நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் 5 மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக் காலத் தடை விதித்தனர்.

அதேநேரம் அமலாக்கத்துறை மணல் விவகாரத்தில் தொடர்ந்து புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்., வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

செல்வ கணபதி சிறை தண்டனை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

நாய் கஞ்சி: வயதானவர்களின் சொல்ல மறந்த கதைகள்… என்று மாறும் இந்த அவலம்? Data Story

ED summons to collectors

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel