ED raided in mp Navas Kani company

நவாஸ் கனிக்கு சொந்தமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் 10க்கு மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (மார்ச் 14) காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டவிரோத பணபரிமாற்ற புகார் அடிப்படையில் சென்னையில் கடந்த சில நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னையில் திருவான்மியூர், தி.நகர், பல்லாவரம், முகப்பேர், கொளத்தூர் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக வரும் மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் நவாஸ் கனிக்கு சொந்தமான பல்லாவரத்தில் உள்ள எஸ்.டி. கொரியர் தலைமை அலுவலகத்திலும், பம்மலில் மார்ஸ் ஓட்டல் உரிமையாளர்களில் ஒருவரான ரியாஸ் என்பவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதே போன்று தி.நகர் பசுல்லா சாலையிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பெயிண்ட் அடிக்கும் ஒப்பந்ததாரரான நரேஷ் என்பவரின் சாய் சுக்கிரன் என்ற தனியார் நிறுவனத்திலும்,

சென்னை சாந்தோமில் போதை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் வீடு அருகேயுள்ள வீட்டின் முதல் மாடியிலும்  அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

WPL 2024 : தொடர்ந்து 2வது முறையாக இறுதிப்போட்டியில் டெல்லி அணி!

விற்பனைக்கு வரும் Xiaomi-யின் முதல் எலக்ட்ரிக் கார் : சிஇஓ சொன்ன ரகசியம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts