வேடச்சந்தூரில் உள்ள திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை இன்று (ஆகஸ்ட் 2) திடீர் சோதனை நடத்தி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக உள்ளவர் வீரா. சாமிநாதன். இவர் அமலாக்கத்துறையால் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்.
செந்தில்பாலாஜி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக இருந்த போது, இவர் பினாமியாக செயல்பட்டதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது.
இந்த நிலையில், வேடச்சந்தூர் கொங்கு நகரில் உள்ள வீரா. சாமிநாதனுக்கு சொந்தமான வீட்டில் 8க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் த.முத்துபட்டியில் உள்ள அவரது தோட்ட பங்களாவிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
அப்பாவிகளை சுட்டுக் கொன்ற ஆர்.பி.எஃப் வீரர்… மன நோயாளியா? மதவாத நோயாளியா?
இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதை “ஹர்காரா”