மணல் குவாரி தொழிலதிபர் வீடுகளில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை!

தமிழகம்

மணல் குவாரி அதிபர் கரிகாலன்,  திண்டுக்கல் ரத்தினம், ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (நவம்பர் 25) மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த செப்டம்பர்  12-ஆம் தேதி மணல் குவாரி அதிபர் கரிகாலன், திண்டுக்கல் ரத்தினம், அவரது நண்பர் ராமச்சந்திரன், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா ஆகியோர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில்  நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா மற்றும் மணல் குவாரி சோதனை நடைபெற்ற 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நவம்பர் 20-ஆம் தேதி முத்தையா ஆஜராகி விளக்கம் அளித்தார்.

மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மணல் அதிபர் கரிகாலன், திண்டுக்கல் ரத்தினம், ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சிஆர்பிஎஃப் போலீசார் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மணல் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருவது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீதான வழக்குகளை திரும்ப பெறுக: எடப்பாடி

பியூட்டி டிப்ஸ்: சருமத்தில் தோன்றும் பால் மருக்கள்… நீக்குவது எப்படி?

+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *