சென்னை தஞ்சை உட்பட 30 இடங்களில் ரியல் எஸ்டேட் அதிபர்களின் வீடுகள், அலுவலங்களில் இன்று (செப்டம்பர் 26) அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் தியாகராய நகர், சரவணா தெரு, திலக் தெருவில் உள்ள ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தஞ்சாவூரிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை தி.நகரில் உள்ள விஜய் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்க கூடிய ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகம் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இன்று காலை முதல் 8 பேர் கொண்ட அமலாக்கத்துறை குழு சோதனை நடத்தி வருகிறது.
இதே அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் வசித்து வரும் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பணியாற்றி வரக்கூடிய ஜோதி குமார் என்பவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோதி குமார் என்பவர் சண்முகத்தின் வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளார் என்ற தகவல் கிடைத்ததன் பேரில் இந்த சோதனை நடைபெறுகிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் சோதனை நடைபெறுவதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
விசிக தலைவர் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி!
பரவும் டெங்கு… 1000 இடங்களில் சிறப்பு முகாம்: அமைச்சர் மா.சு அறிவிப்பு!