தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட இடி அதிகாரி அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ED investigating ankit diwari
திண்டுக்கல் மருத்துவரிடம் இருந்து ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி கைது செய்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். அங்கித் திவாரி பெற்ற லஞ்சப் பணத்தில் வேறு யாருக்கேனும் பங்கு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்து திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இதனையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனிடையே அங்கித் திவாரியை கைது செய்த அன்றைய தினம் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர்.
அப்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு மதுரை தல்லாகுளம் போலீசார் தரப்பில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்ற அடிப்படையில் அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுமட்டுமல்ல… மதுரை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சென்றபோது அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கில்… மதுரை மண்டல அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பிரிஜேஷ் பெனிவாலுக்கு மதுரை மாநகர காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
நாளை டிசம்பர் 26 செவ்வாய்க்கிழமை மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு பிரிஜேஷ் பெனிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது போலீஸ்.
இதனால் நாளை அமலாக்கத்துறை அதிகாரி போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
தமிழ்நாட்டை விட உபி முன்னேறிடுச்சா? அண்ணாமலை கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும்: அப்டேட் குமாரு
எது ப்ளைட் புடிச்சு வர்றது அம்புட்டு கஷ்டமா?… மீம்ஸ் போட்டு கிண்டலடிக்கும் ரசிகர்கள்!
ED investigating ankit diwari