காரில் திமுக கொடி கட்டியது ஏன்? ஈசிஆர் வழக்கில் கைதான சந்துரு வீடியோ வாக்குமூலம்!

Published On:

| By christopher

ECR case Chanduru's confession!

சந்தோஷ் கூறியதால் தான் காரில் கொடி கட்டினேன், பெண்களை துரத்தினேன் என்று கைதான சந்துரு வாக்குமூலம் அளித்த வீடியோ இன்று (பிப்ரவரி 2) வெளியாகியுள்ளது. ECR case Chanduru’s confession!

ஈசிஆரில் பெண்களை காரில் துரத்திய சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட காரை ஓட்டிச்சென்ற சந்துருவை நேற்று போலீசார் கைது செய்தனர். அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட சந்துரு அதிமுகவைச் சேர்ந்தவர் என்றும், திமுக ஆட்சி மீது அதிருப்தியை ஏற்படுத்துவதற்காகவே, திட்டமிட்டு ஈசிஆர் சம்பவத்தில் திமுக கொடியை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சந்துருவின் வாக்குமூல வீடியோ ஒன்று நியூஸ்தமிழ் செய்தி தொலைக்காட்சியில் இன்று (பிப்ரவரி 2) வெளியானது.

காரை துரத்த சொன்னது சந்தோஷ் தான்! ECR case Chanduru’s confession!

அதில், “நான் 2019ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன். அதன்பின்னர் செல்போன் கடை வைத்திருந்தேன். அப்போது வழக்கு ஒன்றில் சிறை சென்று வந்தேன். தற்போது கார், பைக் விற்பனை செய்து வருகிறேன்.

இப்போது ஈசிஆர் வழக்கில், காரை ஓட்டிச்சென்று பெண்களை துரத்தி, மடக்கியது நான் தான். காரில் என்னுடன் இருந்த சந்தோஷ் தான், ’வண்டியை இடித்துவிட்டார்கள் அதை பிடிடா’ என்று என்னிடம் கூறினார். வண்டியை இடித்ததை கூட என் கண்ணால் நான் பார்க்கவில்லை.

அவர்களின் கார்களுக்கு நேராக சென்றபோது, அந்த பெண்கள் ’நாங்கள் நிற்க மாட்டோம்’ என்றனர். ஆனால் சந்தோஷ் காரை மடக்க கூறியதால், துரத்தி சென்றேன். அப்போது தான் பெண்கள் வீடியோ எடுத்தனர். சாலையை வழிமறித்து காரை நிறுத்தியபோது, காரை ரிவர்ஸ் எடுத்து அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

தொடர்ந்து பின்தொடர்ந்து சென்றதும், சந்தோஷ் அவர்களின் ஃபிளாட்டிற்குள் சென்றுவிட்டார். ஆனால் ’என்னிடம் பிடிக்க சொன்ன கார் இது அல்ல.. வேற கார். அவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வந்துருவோம்’ என்றார்.

ஆனால் பெண்களுக்கும், சந்தோஷ்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ’நாங்கள் வெளியே வரமாட்டோம். போலீஸுக்கு சொல்லுவோம்’ என்று பெண்கள் தெரிவித்தனர். அதற்கு சந்தோஷ், “நாங்க பண்ணதற்கு சாரி. நீங்கள் போலீஸிடம் புகார் அளித்தால் என் கார் நம்பரை சொல்லுங்கள்.. எங்களை கூப்பிட்டால் நாங்கள் சந்தித்து கொள்கிறோம்” என்று கூறி வந்துவிட்டார்.

எனக்கு எந்த கட்சியுடனும் சம்பந்தம் கிடையாது. என் அம்மாவின் உறவினர்களான மாமா, தாத்தா இருவரும் அதிமுகவில் தான் இருக்கின்றனர். அந்தகாலத்தில் எம்ஜிஆரின் கார் ஓட்டுநராக என் தாத்தா இருந்தார். 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அப்பா 15 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

சந்தோஷ் உட்பட 6 பேர் என்னை எழும்பூரில் சந்தித்தனர். எனக்கு சந்தோஷ் மட்டும் நன்றாக தெரியும். அஸ்வந்த், லிட்ரேசனை இரண்டாவது முறையாக அப்போது பார்த்தேன்.

நள்ளிரவில் என்னுடைய சஃபாரி காரில் ஆயிரம் விளக்கு சென்றுவிட்டு, ஈசிஆர் வந்தபோது தான் பிரச்சனை வந்தது.

நான், சந்தோஷ் உட்பட யாருமே அன்று குடிக்கவில்லை. காரில் இருந்த கொடியை போடுமாறு சந்தோஷ் தான் கூறினார். நான்கு மாதத்திற்கு முன்பு அனிஷ் என்பவரிடம் இருந்து தான் காரை ரெடி செய்து நல்ல விலைக்கு விற்று தருவதாக் கூறி வாங்கினேன்.

கொடைக்கானல் செல்வதற்காக தான் ஜனவரி 10ஆம் தேதி காரில் கொடி கட்டினோம். அந்த கொடி போட்டால் டோல் கட்டணத்தை கட்ட தேவையில்லை” என்று அந்த வீடியோவில் சந்துரு கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share