ஈசிஆரில் காரில் பெண்களை துரத்திய வழக்கில், முக்கிய நபரான சந்துருவை விரைவில் கைது செய்துவிடுவோம் என்று பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் கூறியுள்ளார். ECR CarChase Who are those youngster
சென்னை புறநகரின் மிக முக்கியமான சாலையான ஈசிஆரில் பெண்களை திமுக கொடி கட்டிய காரில் இளைஞர்கள் சேஸ் செய்து சென்ற வீடியோ இணையத்தில் வெளியானது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரான தாம்பரத்தைச் சேர்ந்த சந்துருவை போலீசார் தேடி வரும் நிலையில், அவர் மீது ஜே.ஜே.நகர் காவல் நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கும், கோட்டூர்புரத்தில் ஒரு மோசடி வழக்கும் உள்ளது தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் இன்று (ஜனவரி 31) பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன், ஈசிஆர் கார் சேஸ் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
“ஈசிஆர் கார் சேஸ் தொடர்பாக கானத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்திருக்கிறோம். தொடர்ந்து நடத்திய புலன் விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டது 7 பேர் என்பது தெரியவந்தது. அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேரை கைது செய்ய வேண்டியுள்ளது. இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்துக்கான நோக்கம்? ECR CarChase Who are those youngster
இந்த சம்பவத்துக்கு நோக்கம் எதுவும் கிடையாது. முட்டுக்காட்டுக்கு புகார்தாரர் சென்றிருக்கிறார். அங்கே இரண்டு வண்டிகள் இருப்பதை பார்த்ததும் அங்கிருந்து அப்பெண்கள் கிளம்பிவிடுகிறார்கள். அப்படி கிளம்பிய உடனே ஒரு வண்டி அவர்களை சேஸ் செய்ததாக சொல்கிறார்கள். அதனடிப்படையில் புலன் விசாரணை செய்து வருகிறோம்.
பாலியல் ரீதியாக துன்புறுத்துவதற்காக துரத்தியதாக கைதானவர்கள் எந்த கருத்தையும் சொல்லவில்லை.
விவரமாக பேசினால் புலன் விசாரணை கெட்டுப்போகும். புலன் விசாரணையில் இருப்பதால் வேறு எதுவும் சொல்லமுடியாது. அந்த இளைஞர்களின் கார்களில் இடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அப்படி ஏதும் இல்லை. அந்த பெண்ணையும் அழைத்து விசாரித்தோம். வாகனத்தில் ஏதும் இடிக்கவில்லை. வண்டி ஓட்டியவர்கள் யாரும் குடிபோதையில் இல்லை.
திமுகவினருக்கு தொடர்பா? ECR CarChase Who are those youngster
இதில் திமுக கட்சிக்கும் இந்த சம்பவத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை. சம்பந்தப்பட்ட வண்டியில் கட்சிக்கொடி இருப்பதை பார்த்திருப்பீர்கள். சுங்கக் கட்டண சலுகை உள்ளிட்டவற்றுக்காக கட்சிக் கொடியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இதில் தொடர்புடைய அனைவரும் மாணவர்கள். இவர்களில் 5 பேர் இங்கு படிக்கிறார்கள். ஒருவர் வேறொரு மாநிலத்தில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். இன்னொருவர் படித்து முடித்துவிட்டு வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.
வழக்கில் தொடர்புடைய சந்துரு மீது ஏற்கனவே சிட்டி லிமிட்டில் இரு குற்ற வழக்குகள் உள்ளன” என கூறினார்.

அப்போது, பெண்களிடம் உங்களை யார் இந்த நேரத்தில் இங்கே வர சொன்னது என போலீசார் கேட்டதாக சொல்கிறார்களே என்ற கேள்விக்கு, “இந்த கருத்தை முற்றிலுமாக மறுக்கிறோம். 24ஆம் தேதி இரவு, விடிந்தால் 25ஆம் தேதி… அப்போதுதான் சம்பவம் நடந்தது. 26ஆம் தேதி காலையில் புகார்தாரர் வருகிறார். அவர்களுக்கு சிஎஸ்ஆர் போட்டுக்கொடுத்து, 4 தனிப்படைகள் அமைத்தோம். ஈசிஆர் சாலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து புகார் உறுதி செய்யப்பட்ட பின்னர் வழக்குப்பதிவு செய்தோம்” என்றார்.
யாருடைய கார்? ECR CarChase Who are those youngster
ஈசிஆர் சாலையில் எந்த சம்பவம் நடந்தாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புகார்தாரர்கள் கூட 10 நிமிடத்தில் போலீஸ் வந்துவிட்டதாக மகிழ்ச்சியோடு கூறினார்கள் என்று கூறிய துணை ஆணையர் கார்த்திகேயன், “இந்த சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்ட கார்கள் , 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் வாங்கப்பட்டது. இந்த கார் மூன்று பேரிடம் இருந்து கை மாறி இவர்கள் கைக்கு வந்துள்ளது. இதில் சஃபாரி கார் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவருடையது. பெயர் மாற்றம் செய்யப்படாததால் அவருடைய பெயரிலேயே உள்ளது.
தற்போது சந்துருதான் அந்த காரை பயன்படுத்தி கொண்டிருக்கிறார். ஒரு ஃபினான்ஸ் மூலம் அணிஷ் என்பவர் இந்த காரை வாங்குகிறார். அவரிடம் இருந்து ஒரு பயன்பாட்டுக்காக இந்த காரை 6 மாதத்துக்கு முன் எடுத்து வந்த சந்துரு மீண்டும் அவரிடம் கொடுக்காமலேயே பயன்படுத்தி வருகிறார். அந்த அணிஷ் காருக்காக இந்த சந்துருவை தேடிக்கொண்டிருக்கிறார்.
தார் காரை ஊட்டியில் இருந்த ஒரு நபர் பயன்படுத்துகிறார். அவருடைய பையன் தான் இப்போது அந்த காரை வைத்திருக்கிறார். இரு கார்களும் போலீஸ் கஸ்டடியில் உள்ளது.
சந்துரு மீது கடத்தல் மற்றும் மோசடி வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்திருக்கிறார்.தற்போதைய வழக்கில் சந்துருவை கைது செய்ய வேண்டியுள்ளது. ஓரிரு நாட்களில் கைது செய்துவிடுவோம். சந்துருவுக்கு அரசியல் பின்புலம் கிடையாது.
வெறும் 3 நிமிடத்தில் நடந்தது ECR CarChase Who are those youngster

தற்போது கைது செய்யப்பட்ட அனைவரும் கல்லூரி மாணவர்கள்தான் என்பதால் அடையாளம் வெளியிடப்படவில்லை.
சம்பவம் நடந்த இரவு குடியரசு தினத்தை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. முட்டுக்காட்டில் இவர்கள் நின்று கொண்டிருந்த போது, போலீசார் அங்கு சென்று கிளம்புங்கள், இங்கு இருக்கக்கூடாது என்று அனுப்பி வைத்திருக்கிறார்கள். அப்போதுதான் புகார்தாரரும் கிளம்பியிருக்கிறார். இந்த நிகழ்வுகள் எல்லாம் வெறும் 3 நிமிடத்தில் நடந்தவை.
கொஞ்சம் கூட போலீஸ் தரப்பில் கால தாமதம் ஏற்படுத்தாமல் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதை தெளிப்படுத்துகிறோம். நடுநிலையோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்” என்று கூறினார். ECR CarChase Who are those youngster