வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் வாரியம் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களும் அவர்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் இதனைச் செய்வதில் பலருக்கும் குழப்பம் இருந்து வந்தது.
காரணம் சிலரது மின் இணைப்பு அவர்களது வீட்டில் உள்ள மூத்த உறுப்பினர்கள் பெயரில் இருந்திருந்தது. இதில் ஒரு சிலர் இறந்துவிட்டார்கள்.
இது போல பல குழப்பங்கள் நிலவி வந்த நிலையில் மின் வாரியம் மின் இணைப்பு வேறொருவரின் பெயரில் இருந்தாலும், எந்த சிரமும் இல்லாமல் பெயரை மாற்றி ஆதார் எண்ணுடன் இணைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது.
இதற்காகத் தமிழகத்தில் உள்ள அனைத்து மின் வாரிய அலுவலகங்களிலும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
அதுமட்டுமின்றி, இணையத்தளம் வாயிலாகவும் ஆதார் எண்ணை இணைக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இணையத்தளம் வாயிலாக ஆதார் எண்ணை இணைக்கும் போது,
வீட்டின் உரிமையாளரா, வாடகைதாரரா அல்லது வீட்டின் உரிமையாளராக இருந்தும் மின் இணைப்பு வேறொருவர் பெயரில் இருக்கிறதா என்ற மூன்று ஆப்ஷன்களில் சரியான ஆப்ஷனை தேர்ந்தெடுப்பது மூலம் இணைக்க முடியும்.
இதன்மூலம் ஏராளமான மக்கள் தற்போது வரை தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
ஆனால் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் குழப்பம் ஏற்பட்டிருந்தது.
தற்போது இதற்கும் தமிழ்நாடு மின் வாரியம் ஒரு ஏற்பாடு செய்துள்ளது. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தமிழகத்தில் இருக்கும் அவர்களது உறவினர்கள் பெயரில் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நான்காவதாக என்.ஆர்.ஐ என்ற ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது மின் வாரியம்.
மோனிஷா
பார்வையற்றோர் டி20 உலகக்கோப்பை: மீண்டும் சாம்பியன் ஆன இந்தியா
“ஸ்டாலின் என்ற பெயரால் பள்ளியில் இடம் கிடைக்கவில்லை” – முதலமைச்சர் பேச்சு!