தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் புகார் தெரிவிக்க வந்த பொதுமக்கள் மீது மின்மீட்டரை தூக்கி அடித்த மின்வாரிய ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் செயல்பட்டு வரும் மின் அலுவலக்துக்கு நேற்று(ஆகஸ்ட் 11) வந்த பொதுமக்கள் சிலர் தீர்த்தகிரி நகரில் நீண்ட நேரமாக மின்சாரம் இல்லை என்று புகார் தெரிவித்தனர். அப்போது மின்வாரிய அலுவலகத்தில் உதவி மின்பொறியாளர் இல்லாததால் அவர் வந்ததும் அனுப்பி பிரச்சினையை சரிசெய்வதாக அங்கிருந்த வணிக விற்பனையாளர் குப்புராஜ் கூறினார். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் குப்புராஜூடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் குப்புராஜுக்கும் அங்கு வந்த மக்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த குப்புராஜ் அலுவலகத்தில் இருந்த மின் மீட்டர் ஒன்றை, ‘ஒரே அடி பாக்குறியா’ என ஆவேசத்துடன் கூறியவாறு பொதுமக்கள் மீது தூக்கியடித்தார். இந்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த மின்வாரிய ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். புகார் தெரிவிக்க வந்த பொதுமக்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதால் அவரை பணியிடை நீக்கம் செய்ததாக பாலக்கோடு உதவி செயற்பொறியாளர் வனிதா தெரிவித்துள்ளார்.
கலை.ரா