வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே மின்கட்டணம் உயரும் என்றும், வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று (ஜூன் 8) தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் ஜூலை மாதங்களில் மின்சார கட்டணத்தை உயர்த்தி கொள்வதற்கான ஆணையை மின் வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அளித்திருந்தது.
அதன்படி மின்கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த மின் வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து எதிர்க்கட்சியினர் தமிழ்நாடு அரசை குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் மின் கட்டண உயர்வு தொடர்பாக மின்வாரியம் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட்டுக்கு 13 பைசா முதல் 21 பைசா மின் கட்டணம் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும், வீட்டு இணைப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
மெஸ்ஸி இணைந்த இண்டர் மியாமி கிளப்: சுவாரசியமான 5 தகவல்கள்!
ஸ்டான்லி மற்றும் தருமபுரி மருத்துவக் கல்லூரிகள் மீண்டும் இயங்க அனுமதி!