விடுமுறை நாட்களில் காலை உணவைத் தவிர்த்து மதிய உணவுக்கு முன்பாக சூப் சாப்பிடுவது அதிகரித்து வரும் நிலையில் சரியான முறையில் சூப் தயாரிக்க இதோ சில குறிப்புகள்…
அதிக நேரம் கொதிக்க வைத்தால் காய்கறிகளில் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படலாம் என்பதால், காய்கறி சூப்பை அதிகம் கொதிக்க வைக்கக் கூடாது.
அசைவ சூப் தயாரிக்கும்போது, அதை அதிக நேரம் கொதிக்க வைத்தல் அவசியம். காரணம், அப்போதுதான் கறியில் இருக்கும் சத்துகள் யாவும் சூப்பில் இறங்கும். செரிமான சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
சூப்பில் நறுமண இலைகள் சேர்க்கும்போது, அவற்றை அரைத்து உபயோகப்படுத்த வேண்டாம். அப்படியே இலைகளாக உபயோகப்படுத்தவும். முடிந்தால் அவற்றின் சாற்றை மட்டும் பயன்படுத்தவும். அரைத்துப் பயன்படுத்தும்போது, குறிப்பிட்ட அந்தப் பொருளின் மணமும் சுவையும் சூப்பில் அதிகரித்துவிடும். அது, சூப்பின் சுவையை மாற்றிவிடும்.
காய்கறி சூப் தயாரிக்கும்போது, காய்கறி தேர்வில் கவனமாக இருக்கவும். எதிரெதிர் வண்ணங்களிலிருக்கும் காய்கறிகளை ஒரே சூப்பில் சேர்த்துவிடாதீர்கள். அது சுவை, மணம் என அனைத்தையும் கெடுத்துவிடும்.
சூப்பை திடமாக்க, வொயிட் சாஸ் உபயோகிப்பதுண்டு. சிலர் வெண்ணெய் பயன்படுத்துவார்கள். அவையெல்லாம் வேண்டாமென நினைப்பவர்கள், கான்ஃப்ளார் உபயோகிக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: இந்தியன் ஸ்டைல் பாஸ்தா
கிச்சன் கீர்த்தனா: பாஸ்தா சிக்கன் மசாலா!