சென்னையில் அதிகாலையில் களைகட்டிய மாரத்தான்!
சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் நீரழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி திரட்டும் வகையிலும் சென்னையில் இன்று (ஜனவரி 8 ) அதிகாலை முதல் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்று வருகிறது.
அதிகாலை 4 மணி முதல் நேப்பியர் பாலத்தில் இருந்து முழு மாரத்தான் பந்தயம் தொடங்கியது.
இது சாந்தோம், அடையாறு மத்திய கைலாஷ், டைட்டல் பார்க், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், அக்கரை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அருகில் முடிவடைகிறது.
முதல்முறையாக இந்த போட்டியில் பார்வை குறைபாடுள்ள 30 வீரர்கள், 50 சக்கர நாற்காலிகள் ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
மினி மாரத்தான் பந்தயம் பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது.
இந்த போட்டியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த மாரத்தான் போட்டிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
எனக்காக சண்டை போட்டவர் டி.ஆர்.பாலு: நட்பை நினைவு கூர்ந்த முதல்வர்!
அடுத்த மூன்று மணி நேரம்: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?