சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் புகைப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தி இந்து பத்திரிக்கை புகைப்பட கலைஞர் கே. வி .சீனிவாசன் இன்று (ஜனவரி 2 ) திடீரென மயங்கி விழுந்து காலமானர்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம்.
இங்கு நின்ற கோலத்தில் வீர நிலையில் மீசையுடன் வெங்கட கிருஷ்ணராகவும் யோக நிலையில் யோக நரசிம்மராகவும், யோகசயன நிலையில் ஸ்ரீரங்கநாதராகவும் பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலிக்கிறார்.
இந்நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
அப்போது அங்கு புகைப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தி இந்து பத்திரிக்கையின் புகைப்பட கலைஞர் கே. வி .சீனிவாசன் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது அவரது குடும்பத்தினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அதிகரித்த வேலைவாய்ப்பின்மை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
ஹீரோயின் போல் ஜொலிக்கும் அஜித் மகள்: வைரல் புகைப்படம்!