திருவாரூர் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் மூன்று பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை இன்று (அக்டோபர் 15) வழக்குப்பதிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று (அக்டோபர் 14) பத்திரப் பதிவு துறை, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, தொழில்துறை, வட்டார போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறை,
உள்ளிட்ட பல துறைகளின் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு பணம் வசூல் செய்து வருவதாக எழுந்த புகாரின் பேரில், இந்த சோதனை நடத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் – நாகை பைபாஸ் சாலையில் உள்ள திருவாரூர் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்திலும் நேற்று சோதனை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் அருண், சித்ரா, சார்பு ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் காவலர்கள் என 12 பேர் கொண்ட குழு இந்தச் சோதனையில் ஈடுபட்டது.
அப்போது, கணக்கில் வராத ரூ.75 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து அலுவலகத்தில் இருந்த கோட்டப் பொறியாளர் இளம்வழுதி, இளம்நிலை பொறியாளர் உள்ளிட்ட ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், இன்று (அக்டோபர் 14) திருவாரூர் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
நேற்று கணக்கில் வராத ரூ.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கோட்டப் பொறியாளர் இளம்வழுதி, இளநிலை பொறியாளர் குமரச் செல்வன், உதவி கோட்டப் பொறியாளர் மாரிமுத்து ஆகியோர் மீது இன்று லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஜெ.பிரகாஷ்
மும்முனை போட்டியில் இமாச்சல் தேர்தல்! முடங்கப்போவது யார்?
கள்ளக்குறிச்சி பள்ளி: திடீர் விசிட் அடித்த தேவாரம்