நாமக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (அக்டோபர் 23) அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 450-க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு தினமும் பத்திரங்களை பதிவு செய்வது, வில்லங்க சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட பணிகளில் அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்.
இந்தநிலையில், தீபாவளி நெருங்கும் நேரத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு பல்வேறு புகார்கள் சென்றது.
இந்த புகாரின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர், அச்சரப்பாக்கம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அவிநாசி, திருச்செங்கோடு, விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், தேனி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள சார்பதிவாளர் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றது.
இதற்கிடையில், கடலூர் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கு வராமல் இருக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக, கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செந்தில் குமாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று கைது செய்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தவெக மாநாடு: அய்யனார் கோவிலில் விசேஷ யாகம்!
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை ஏற்கக்கூடாது: பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு!
Comments are closed.