லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… ஒரே நாளில் ரூ.1.12 கோடி பறிமுதல்!

தமிழகம்

தமிழகம் முழுவது நேற்று (அக்டோபர் 14) அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய திடீர் சோதனையில் ரூ.1.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நேற்று லஞ்சஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மொத்தம் திருவாரூர், நாமக்கல், விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி உட்பட 27 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

அதில் சுமார் 1 கோடியே 12 லட்சத்து 57 ஆயிரத்து 803 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்கள் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்களுடன் இணைந்து,

14.10.2022 அன்று தமிழகத்தில் உள்ள பத்திரப்பதிவு துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, தொழில்துறை, வட்டார போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை, வணிகவரித்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம்,

தீயணைப்புத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், தமிழ்நாடு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகர ஊரமைப்புத்துறை, வேளாண்மைத்துறை, மதுபானம் மற்றும் ஆயத்தீர்வை துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆகிய 16 துறை சார்ந்த 46 அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

அதில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூபாய். 1,12,57,803/- மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

மேற்படி கைப்பற்றப்பட்ட கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூபாய்.1,12,57,803/-யில், திருவாரூர் கோட்ட பொறியாளர், நெடுஞ்சாலை விருந்தினர் விடுதியிலிருந்து மட்டும் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.75,00,000/- கைப்பற்றப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

தமிழகம் 5 வது இடம்: முதல்வர் வாழ்த்து!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *