Dussehra celebration burn effigies

தசரா கொண்டாட்டம் : சனாதன எதிர்ப்பாளர்கள் உருவபொம்மைகள் எரிப்பு!

தமிழகம்

“நன்மை தீமையை எரிக்கிறது” என்ற பொருளுடன் கொண்டாடப்படுவது தசரா பண்டிகை.

தசரா பண்டிகையின் முக்கியமான நிகழ்வான ராவண உருவ பொம்மை எரிக்கும் நிகழ்வு இன்று (அக்டோபர் 24) நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

ராவணன், மேகநாதன், கும்பகர்ணன் உருவபொம்மைகள் எரிக்கப்படும் இந்த நிகழ்வு ராம் லீலா என்று அழைக்கப்படுகிறது.

டெல்லியில் பல்வேறு இடங்களில் இவ்விழா கொண்டாடப்பட்ட நிலையில் செங்கோட்டையில் தர்மிக் லீலா கமிட்டி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு உருவபொம்மைகளை எரித்தார்.

அப்போது பேசிய அவர், “ ஊழல் முதல் பயங்கரவாதம் வரை எத்தனையோ தீமைகளை எதிர்கொள்கிறோம், எத்தனையோ தீய விஷயங்கள் நம் முன்னால் உள்ளன. இந்த சவால்களை சமாளிக்க ராமரின் சித்தாந்தங்கள் நமக்கு உதவும்” என்று கூறினார்.

தவார்கா செக்டார் 10 பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
தசரா விழாவில் ராமன், சீதை, லட்சுமணன்,அனுமன் ஆகியோருக்கு பூஜை செய்து வழிபட்டார்.

Dussehra celebration burn effigies

அங்கு ஏற்கனவே தயார் செய்யப்பட்டு வைத்திருந்த ராவணன், மேகநாதன், கும்பகர்ணன் உருவபொம்மைகளை வில் அம்புமூலம் எரித்து கொண்டாடினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நாட்டு மக்கள் அனைவருக்கும் நவராத்திரி மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியின் அடையாளமாக இப்பண்டிகை திகழ்கிறது.

அயோத்தியில் ராமர் கோவிலை நீண்ட காத்திருப்புக்குப் பிறகு நாம் பார்க்கப்போகிறோம். இதை காணும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது. இது நமது பொறுமைக்கு கிடைத்த வெற்றி” என்றார்.

செங்கோட்டை மைதானத்தில் நவஸ்ரீ தர்மிக் ராம்லீலா கமிட்டி நடத்திய ‘ராவண தஹன்’ நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டு ராவணன் உள்ளிட்டோரது உருவபொம்மைகளை எரித்தார்.

இதுபோன்ற கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில் டெல்லியில் பல இடங்களில் ராவண உருவ பொம்மையுடன் சேர்த்து சனாதனத்திற்கு எதிராக பேசியவர்கள் என்று எழுதப்பட்ட உருவ பொம்மைகளும், உலக அமைதிக்கு எதிரானவர்கள் என்ற உருவபொம்மைகளும் எரிக்கப்பட்டன.

Dussehra celebration burn effigies

திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இன்று இரவு 12 மணியளவில்  மகிஷாசூரனை அம்மன் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

அண்மையில் சென்னையில்  ஆ.ராசா எம்.பி., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சனாதனத்துக்கு எதிராக பேசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

சாம்சங்கின் புதிய கேலக்சி A9 வரிசை டேப்கள்!

கத்தியைத் தீட்டாமல் புத்தியைத் தீட்டுங்களேன் இயக்குனர்களே?

துருவ நட்சத்திரம் ட்ரெய்லர் வெளியானது!
.

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0