காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு வலியுறுத்தக்கோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் டெல்லியில் இன்று சந்திக்க திட்டமிட்டிருந்தனர். இந்தநிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நாளை சந்திக்க உள்ளதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத்தை இன்று மாலை 4 மணிக்கு அவரது அலுவலகத்தில் சந்திக்க அனுமதி வாங்கியிருந்தோம். பிரதமர் அலுவலகத்திலிருந்து அவருக்கு அவசர அழைப்பு வந்ததால் நாளை காலை 9 மணிக்கு அவரது இல்லத்தில் சந்திப்பதாக தெரிவித்துள்ளார்.
காவேரி ஒழுங்காற்று வாரியம் தமிழகத்திற்கு விநாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சொன்னது ஆறுதல் அளிக்கிறது. கர்நாடகா தண்ணீர் திறந்து விடாததால் தமிழகத்தில் பயிர்கள் வாடிவிட்டன. தமிழகத்திற்கு 360 டிஎம்சி தண்ணீர் வரவேண்டியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று வாரியம் முறையாக செயல்படுத்துகிறார்களா என்பதை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் சொல்வதை கர்நாடகா அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். எப்பொழுதுமே கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் தர அனுமதிக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
“அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை” – ஜெயக்குமார்
சூரியனில் அறிவியல் தரவுகளை சேகரிக்க துவங்கிய ஆதித்யா எல் 1