செந்தில்பாலாஜி வழக்கு: ’ஆள விடுங்கோ’ – துரைமுருகன் எஸ்கேப்!

Published On:

| By christopher

செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட இருவேறு தீர்ப்புகள் குறித்து கேட்டதற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.

கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் திறப்பது தொடர்பாக மத்திய அரசிடம் பேசுவதற்காக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஜூலை 4) டெல்லி செல்கிறார். அவர் நாளை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேச உள்ளார்.

முன்னதாக சென்னையில் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து துரைமுருகன் தனது டெல்லி பயணம் குறித்தும், மேகதாது அணை விவகாரம் குறித்தும் பேசினார்.

அப்போது அவரிடம் செந்தில்பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில், இரு மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்ட்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “ என் விஷயம் கேட்டீங்கள்ல.. ஆள விடுங்கோ” என்று சிரித்தபடியே புறப்பட்டார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கர்நாடகா காவிரி நீரை திறந்துவிட வேண்டும்: துரை முருகன்

செந்தில்பாலாஜி வழக்கு: இரு நீதிபதிகளின் தீர்ப்பு என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share