தேயிலை மகசூல் அதிகரிப்பு : தோட்டங்களிலேயே தேக்கமடையும் நிலை… காரணம் என்ன?

தமிழகம்

கோத்தகிரியில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. அதிக விளைச்சல் இருக்கும் தற்போதைய சூழலில் தேயிலைக்கு உரிய விலை கிடைக்காததால் தேயிலை தோட்டங்களிலேயே தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேயிலை விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கோத்தகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பிரதான தொழிலாக தேயிலை விவசாயத்தை நம்பியே பெரும்பாலான தேயிலை தோட்ட சிறு குறு விவசாயிகள் உள்ளனர்.

தற்போது, கோடை மழை பெய்துள்ள நிலையில் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. அதிக விளைச்சல் இருக்கும் தற்போதைய சூழலில் தேயிலை பறிக்க முடியாத நிலையும் தேயிலைக்கு உரிய விலை கிடைக்காததால் தேயிலை தோட்டங்களிலேயே தேக்கமடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

வட இந்தியாவில் அசாம் தேயிலையைபோல, தென்னிந்தியாவில் கோத்தகிரி தேயிலை மிகச் சிறப்பு வாய்ந்தது. அப்படிப்பட்ட தேயிலைக்கு கடந்த 40 ஆண்டுகளாக உரிய விலை கிடைக்காததால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

இதனால், பலர் விவசாயம் மேற்கொள்ள முடியாமல் திணறுகின்றனர். சிலர் விவசாயத்தைக் கைவிட்டு, வேறு வேலைக்காக சமவெளிப் பகுதிகளுக்குச் சென்றுவிடுகின்றனர்.

தற்போது, பசும்தேயிலை விளைச்சல் அதிகம் இருப்பதால் தேயிலைக்கு உரிய விலை கிடைத்திடவும், காலநிலை மாற்றம் காரணமாக தேயிலை தோட்டங்களில் மேக மூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் பசும்தேயிலைகளில் கொப்பள நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்று, தேயிலை விவசாயிகளுக்கு ஏற்படும் இன்னல்களை கருத்தில்கொண்டு தேயிலைக்கு உரிய விலை வழங்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : மாங்காய் அடை

டிஜிட்டல் திண்ணை: அதிமுக கூட்டணி… அண்ணாமலைக்கு எதிராக வெடிக்கும் தமிழிசை- அமித் ஷா கொடுத்த சிக்னல்!

இதுக்கெல்லாம் கூட்டணி உடையுமா? அப்டேட் குமாரு

கோவை: அகில இந்திய கூடைப்பந்து போட்டி – சென்னை அணி வெற்றி!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *