பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் காரணமாக சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று (நவம்பர் 29) முதல் டிசம்பர் 14-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு மிகவும் எளியதாக ரயில் பயணம் அமைந்துள்ளது. குறைந்த கட்டணத்தில் சரியான நேரத்திற்கு அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மின்சார ரயில் பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் புறநகர் மின்சார ரயிலை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக இரவு நேர ரயில் சேவையானது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் டிசம்பர் 14-ஆம் தேதி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே பொறியியல் வேலை மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் இரவு 11.59 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் ரயில் மற்றும் மறு மார்க்கமாக இரவு 11.40 மணிக்கு தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தெலங்கானா தேர்தல்: ரூ.1,470 கோடிக்கு மது விற்பனை!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
தெலங்கானா தேர்தல்: மாற்றம் வருமா?