நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 27) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
வருகிற அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும், தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வருகிற 29 ஆம் தேதி துவங்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தென் மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக, இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோவை கார் வெடிப்பு…மவுனம் கலைத்த திமுக…பா.ஜ.க.வை விளாசி தள்ளிய முரசொலி!
கோவை கார் வெடிப்பு: யாருக்கு வைத்த குறி?