தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் வேலூரில் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் இன்று (செப்டம்பர் 21) விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பருவமழை தொடங்குவதற்கு முன்பே பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மலை பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் காற்றுடன் கூடிய மிதமான பெய்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கனமழை காரணமாகத் தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மழை காரணமாக விடுமுறை விடப்படுகிறது. அதேசமயம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தாது” எனவும் தெரிவித்துள்ளார்.
காலாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் காஞ்சிபுரத்தில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.
மோனிஷா
காட்டுப்பன்றிகள் வேட்டை எனக் கூறி வனத்துறையினரை சிறைபிடித்த கிராம மக்கள்!
கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாத தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு!