வெள்ளப்பெருக்கு… குற்றாலத்தில் குளிக்க தடை!

Published On:

| By Selvam

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று (ஜூலை 15) தற்காலிமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே பல பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், நேற்று (ஜூலை 14) இரவு  குற்றாலத்தில் பெய்த கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன்கருதி,  குற்றால மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவியில் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் சீசன் களைகட்டும். இங்கு தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்தநிலையில், குளிக்க தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்:  ‘ஆலியா கட் குர்தா’ ஆடை அணிய ஆசையா?

ஹெல்த் டிப்ஸ்: பிரபலமாகும் புரோட்டீன் பவுடர்… நல்லதா, கெட்டதா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share